Call: 9940634248
Call: 9940634248

சிலம்பொலியார்

பற்றிய குறிப்புகள்
  • பெயர் : சு.செல்லப்பன்
  • பிறந்த ஆண்டு : 24.09.1928
  • பிறப்பிடம் : சிவியாம்பாளையம், நாமக்கல்
  • கல்வி : எம்.ஏ. (தமிழ்), பி.டி., பி,எல்., பிஎச்,டி.
  • தந்தையார் : சுப்பராயன்
  • தாயார் : பழனியம்மாள்
  • மனைவி : செல்லம்மாள்
  • மகன்கள் : தொல்காப்பியன், கொங்குவேள்
  • மகள்கள் :மணிமேகலை , கெளதமி, நகைமுத்து

எழுதிய நூல்கள்

திருக்குறள் இன்பத்துப்பால்
( மூலமும் உரையும் )

View

விருதுகள்

அணிந்துரைச் செம்மல் விருது 2014

View

பட்டங்கள்

பாவேந்தர் பைந்தமிழ் விருது 2017
தமிழ்ப் பேராயம், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், சென்னை

View

செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில்
ஆற்றிய சிறப்புப் பற்றிய விவரங்கள்

பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இளங்கோ இயற்றியருளிய சிலப்பதிகாரம் காப்பியம் இருபதாம் நூற்றாண்டில்தான் புலவர் மனைகளிலிருந்து வெளியேறிப் பொதுமக்களிடையே உலா வருகிறது. சிலப்பதிகாரம் என்றாலே இரண்டு சான்றோர்கள் பெயர் உடனே அனைவரின் நினைவுக்கு வரும். ஒருவர் சிலப்புச் செல்வர் ம.பொ.சி. அடுத்தவர் சிலம்பொலி செல்லப்பன். கடந்த 60 ஆண்டுகளாக சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வருகிறார்.

1953 ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் சொல்லின் செல்வர் இரா.பி. சேதுபிள்ளை அவர்கள் தலைமையில் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் செல்லப்பன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த அவர், சிலம்பொலி என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினார். அப்போழுதுமுதல் சிலம்பொலிக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

1975 ஆம் ஆண்டு சிலப்பாதிகாரம் பற்றிய முழுைமையான ஆய்வு நூலை எழுதி சிலம்பொலி என்ற தலைப்பில் வெளியிட்டார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் சிலம்பொலி நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில், கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. இதை மக்கள்மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழத்துக்கள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும், எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர், அவர் நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்ல, அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்கு சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல ஏழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுனர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு நகரில் பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு கண்ணகி விழா என இலக்கிய அங்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாய் விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பன் தான்.

மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அடியொற்றி அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் 18 பொழிவுகள் 18 மாதங்கள் என்ற அளவில் மிகச் சிறந்த தொடர் சொற்பொழிவாற்றியதோடு, எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதி கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் படைத்துள்ளார்.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தின் தலைப்பில், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓர் ஆண்டு காலம் 15 பொழிவுகளாக தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியதோடு, இக் காப்பியத்தின் சிறப் பைப் பரப்ப அயராது பாடுபட்டு வருகிறார்.

1990 ஆம் ஆண்டு வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி , நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை எனும் பத்துப்பாட்டு நூல்களையும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 பொழிவுகில் தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி சாதனை படைத்தார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சிகளை தொகுத்து சங்க இலக்கியத்தேன் என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன . சங்க இலக்கியங்கள் பற்றிய இப்பணி பாரட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது என முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்குப் பேராசிரியர் அன்பழகன் அளித்துள்ள ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான் சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பது போலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில் இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளை தங்கத் தாம்பாளத்தில் கொட்டி வைத்துப் பரிசளித்தது போன்றும் இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது. இதனை நானே, பல கல் தொலைவு பயணம் செய்து மேடை யேறி உறையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்கு குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்து வைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன் உவகையுற்றேன்.

சங்க இலக்கிங்கள் பழந்தமிழரின் காதல், வீரம், ஆட்சி முறை, வாணிகம், வள்ளன்மை, வாழ்க்கை முறை, சமுதாய அமைப்பு , பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிவிக்கின்றன . சங்க இலக்கியங்கள் தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியங்களாக விளங்கிய போதிலும், அவை மக்களிடம் பெருமளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. புலவர் பெருமக்களால் மட்டுமே பயிலப்பட்டு வந்தன. சங்க இலக்கியங்களப் பொதுமக்கள் நனகு புரிந்து கொள்ளும் வகையில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதோடு, அரும்பணியாக சங்கத் தமிழ்த் தேன் என்ற நூலை (முன்று தொகுதிகள் ) வெளியிட்டு , சங்க இலக்கியங்கள் பரவி்ட பெருந்தொண்டு செய்துள்ளார் சிலம்பொலி செல்லப்பன.

சிலம்பொலி செல்லப்பன் அலர்களின் உயிரோடு கலந்தது திருக்குறள். திருக்குறள் இடம் பெறாத சிலம்பொலி செல்லப்பனின் சொர்பொழிவைக் கேட்பது அரிது கட்டுரையைக் காண்பது அரிது ஒருவர் எளிதாகப் புகழ் அடைய, திருக்குறள் இல்லற இயலில் உள்ள அதிகாரங்களை வரிசைப்படுத்தினாலே விடைகிடைத்துவிடும் எனக் கூருவார்.

இல்லறம் ஏற்று, வாழ்க்கைத் துணை நலமாக அமையப் பெற்று, நன்மக்களை ஈன்றெடுத்து , அன்புடையவனாய், விருந்தோம்பி, இனியவை கூறி , செய்நன்றி மறவாது, நடுவுநிலை தவறாது, அடக்கமுடையவராக, ஒழுக்கத்தை பேணி, சான்றோர் கடியும் குற்றம் களைந்து , அகழ்வாைரத் தாங்கும் நிலம் பொலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்து , அழுக்காறு அகற்றி , பிறர் பொருளுக்கு ஆசைப்படாது, பறங்கூறாமல் , பயனில சொல்லாமல் , தீய செயல்களைச் செய்ய அஞ்சி , உலக நடையறிந்து ஒழுகி , ஈத்துவக்கும் பண்புடையோரைப் புகழ் தானே வந்தடையும் என்று கூறி திருக்குறள் சிறப்பையும் , பெருமையையும் விளக்கமளடித்து வரும் சிலம்பொலி செல்லப்பன் சொலல் வலன், சோர்விலன் , அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத்தி திகழ்கிறார். உலகம் பொதுமறையாம் திருக்குறள் எக்காலத்துக்கும் , எவ்விடத்துக்கும் , எவருக்கும் பொதுவாக, பொருத்தமாக இருக்கிறது என்ற கருத்தினை மேடைகள் பலவற்றில் முழங்கியுள்ளார்.

மலர் நீட்டம் என்ற பெயரில் இவர் எழுதியுள்ள நூல் திருக்குறள் காட்டு்ம் வாழ்க்கை நெறியை அறியப் பெரிதும் துணை செய்கிறது. நல்ல கட்டுரைகள், சுவைத்தற்குறிய நடை சிந்தனைக்குறிய செய்திகள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளத் துணை செய்யும் நல்லுரைகளை மலர் நீட்டம் தருகிறது என இந்நூலுக்கு அளித்துள்ள அருளுரையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உயர் குலத்தவர் யார் , தமிழர்க்கு வேண்டும் தமிழ் மறை , சிலம்பில் திருக்குறள், திருக்குறளில் கணித இயல் , தலை முடியும் தமிழ் மறையும் முதலான அற்புதமான , அரிய கட்டுரைகள் சிலம்பொலி செல்லப்பனின் திருக்குறள் பற்றையும் , புலமையையும் ஆய்வின் ஆழத்தையும் காட்டுவதோடு, திருக்குறளைத் தரணியெங்கும் பரப்பிட அவர் எடுத்துள்ள அயரா முயற்சிகளையும் விளக்கும் . மலேசியாவில் நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு திருக்குறளின் சிறப்பு பற்றி இவர் ஆற்றிய உரை கேட்டவர் நெஞ்சங்களில் பதிந்துள்ளது.

நாலடியார் மூலத்திற்கு இவர் எழுதியுள்ள விளக்கவுரை தமிழார்வலர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

செம்மொழி எண்பேராயக் குழுவில் உறுப்பினராய்ப் பணியாற்றியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்க் குழுவின் துணைத் தலைவராய்ப் பணியாற்றி , மலர் மிகச் சிறப்பாக அமைவதற்கு அயராது அல்லும் பகலும் உழைத்தார். அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், மலர்க் குழுத் தலைவர் பேராசிரியர் அன்பழகனார் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பாராட்டைப் பெற்றார்.

வானொலியிலும், தொலைக்காட்சியிலும், திருக்குறள் , சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாணி, பத்துப்பாட்டு , எட்டுத்தொகை, பதினென் கீழ்க்கணக்கு முதலான சங்க இலக்கிய நூல்கள் பற்றி எண்ணற்ற உரைகள் நிகழத்தி செம்மொழி பரப்பிட உழைத்தவர்.

இவ்வாறு செம்மொழி தமிழைப் பரப்பும் வகையில் மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பு பற்றி சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன்.

© 2017. All rights are reserved

Design by Microshare

Choose Your Color